[X] Close

பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா-கத்தார் இடையே ஒப்பந்தம்

Deal-signed-between-America-and-Qatar

 


Advertisement

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு அமெரிக்காவும், கத்தாரும் ஒப்பந்தம் செய்துள்ளன.

கத்தார் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கிடையே நிலவும் பிரச்னையை தீர்க்கும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தோஹா சென்றார். அங்கு கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மானை சந்தித்த அவர் பயங்கரவாத்திற்கு நிதி அளிக்கப்படுவதை தடுப்பது தொடர்பாக விரிவாக பேசினார். அதன் பின்னர், இதுதொடர்பாக இருவரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று டில்லர்சன் கூறினார். அதேவளையில், இந்த ஒப்பந்தத்திற்கும், கத்தார் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைக்கும் தொடர்பில்லை என்று முகமது பின் அப்துல்ரஹ்மான் கூறினார். கத்தாருக்கும், சவுதி கூட்டணி நாடுகளுக்கும் இடையேயான பிரச்னையை தீர்க்கும் முயற்சியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டில்லர்சன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை எகிப்தில் இன்று சந்தித்து பேசுகிறார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close