காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 134 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 133 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது. 231 ஏரிகள் 75% கொள்ளளவை எட்டியுள்ளது. 262 ஏரிகள் 50% கொள்ளளவை எட்டியுள்ளது. 241 ஏரிகள் 25% கொள்ளளவை எட்டியுள்ளது. 40 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக தனது கொள்ளளவை எட்டியுள்ளது. 1 ஏரி நீர்வரத்து இல்லாமல் உள்ளது என பொதுப்பணி துறை தெரிவித்துள்ளது.
இதில் ஏரையூர், செம்பாக்கம், நத்தப்பேட்டை, வையூர் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வையாவூா், நத்தப்பேட்டை, எறையூா் தேவனேரி, தாத்தனூா், குண்டுப் பெரும்பேடு, ஆரனேரி பெரிய ஏரி, நன்மங்கலம், புளிக்கொரடு இடும்பன் ஏரி, செம்பாக்கம் ஆகிய ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் கோலம்பாக்கம், எம்.என்.குப்பன் சித்தேரி, புக்கத்துரை பெரிய ஏரி, பட்டரைக் காலனி ஏரி உள்பட மாவட்டம் முழுவதும் 134 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளான தாமல் ஏரி 18 அடி ஆழம் கொள்ளளவு கொண்டதில் 4 அடி ஆழம் நீர் நிரம்பி உள்ளது. அதேபோல் 18 அடி கொள்ளளவு கொண்ட தென்னேரி ஏரியில் 15 அடி நீர் நிரம்பி உள்ளது. 20 அடி கொள்ளளவு கொண்ட உத்திரமேரூர் பெரிய ஏரி அதில் ஆறு அடி நீர் நிரம்பி உள்ளது ஸ்ரீபெரும்புதூர் ஏரி 18 அடி ஆழம் கொண்டதில் 15.60 அடி நீர் நிரம்பி உள்ளது மணிமங்கலம் ஏரியில் 18.60 அடையாளம் கொண்டதில் 15.60 அடி நீர் நிரம்பி உள்ளது.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 23.30 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது 16.11 அடி நீர் நிரம்பி உள்ளது. 16.11 அடி கொள்ளளவு கொண்ட கொண்டங்கி ஏரியானது 13 அடி நீர் நிரம்பி உள்ளது. பொன்விளைந்த களத்தூர் ஏரி 15.30 ஆழம் கொண்டதில் 11.60 அடி நீர் நிரம்பி உள்ளது. கொளவாய் ஏரியானது 16 அடி ஆழம் கொண்டதில் 12.90 அடி நிரம்பியுள்ளது.
Loading More post
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!