Published : 24,Nov 2020 12:32 PM

3 மணி நேரமாக அதே இடம்... நகராத 'நிவர்' புயல் !

Nivar-cyclone-not-moved-for-past-3-hours

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் கடந்த மூன்று மணி நேரமாக அதே இடத்தில் நகராமல் நிலைக் கொண்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தம் 'நிவர்' புயல் வங்கக் கடலில் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் இன்று இரவு தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகலில் மகாபலிபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Image

இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றம் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் சென்னையில் இருந்து 450 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் அதே இடத்தில் கடந்த 3 மணி நேரமாக நகராமல் இருந்து வருகிறது. 5 கி.மீ. வேகத்தில் நெருங்கிய நிவர் 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்