இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’ படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார் என்றும் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்றும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது.
இத்தகவலை, மறுத்துள்ள இயக்குநர் பாண்டிராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், “நண்பர்களே, சூர்யா 40 பற்றிய உங்கள் ஆர்வத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். தயவு செய்து வதந்திகளை நம்பவேண்டாம். தயாரிப்பு நிறுவனம் விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை அறிவிக்கும். நாங்களும் உங்களுக்கு சிறந்த படத்தைக் கொடுக்க கடுமையாக உழைக்கிறோம்” என்று வேண்டுகோள் வைத்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தை சூர்யா நடித்ததோடு தயாரிக்கவும் செய்தார்.
அதோடு, கடந்த 2018 ஆம் ஆண்டு சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை பாண்டிராஜ் இயக்கினார். அந்த ஆண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மாறியது.
Dear friends we understand ur curiosity about #Suriya40 . Pls don't believe rumors. Production house will announce the cast & crew soon.we r working hard to give u the best ?? — Pandiraj (@pandiraj_dir) November 23, 2020
இந்நிலையில்தான், தற்போது சூர்யாவின் பெயரிடப்படாத ’சூர்யா40’ படத்தை இயக்கவிருக்கிறார்.
Loading More post
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?