[X] Close

இந்தியா - சீனா எல்லை பதற்றம்: அமெரிக்கா மவுனம்

India---China-border-tension--America-silence

இந்தியா - சீனா எல்லையில் படைக்குவிப்பு பிரச்னை 3வது வாரமாக நீடித்து வரும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது. 
எல்லை விவகாரம் குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர், இது குறித்து அந்த இரு நாடுகளிடம் கேளுங்கள் என கூறிவிட்டார். இதற்கிடையில் எல்லை பிரச்னைக்கு இரு நாடுகளும் வியூக ரீதியான முதிர்ச்சியுடன் தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சிக்கிமிற்கும் பூடானுக்கும் இடையே சீனாவுக்கு சொந்தமான சும்பி பள்ளத்தாக்கை ஒட்டிய பகுதியில் அந்நாடு மேலும் படைவீரர்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக சிக்கிம் எல்லையில் 2,500 வீரர்களை இந்தியா நிறுத்தியுள்ளது. இதே போல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் முதல் அருணாசல பிரதேசம் வரை சீனாவை ஒட்டி 4,057 கிலோ மீட்டர் நீளத்துக்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close