Published : 12,Jul 2017 03:13 AM

சாமானிய மக்களை வதைக்கும் தக்காளி விலை!

tomota-rates-flying-high

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தக்காளியின் விலை வழக்கத்திற்கு மாறாக தாறுமாறாக உயர்ந்து, ஒரு கிலோ 100ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த பல மாதங்களாக போதிய மழை இல்லாததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி சாகுபடி பொய்த்துப்போனது. இதனால் தக்காளியை பயிரிடாமல்
விவசாயிகள் மாற்றுப்பயிராக பச்சை மிளகாய், கத்திரிக்காய் உள்ளிட்டவைகளை பயிரிட்டனர். இதனால் தக்காளியின் வரத்து பெருமளவு குறைந்தது. தக்காளியின் வரத்து குறைந்ததை தொடர்ந்து, அதற்கான தேவை உயர்ந்ததை பயன்படுத்தி வியாபாரிகள் தற்போது தக்காளியை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது, 100க்கு மேல் பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பெங்களூர் ரக தக்காளி பல மாவட்டங்களில் விற்பனைக்கே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்