[X] Close

தமிழக மக்கள் அமைதிகாக்க வேண்டும்: கிரிக்கெட் வீரர் சேவாக் வேண்டுகோள்

Virender-Sehwag-Request-for-Peace-in-Tamil-Nadu

தமிழக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் சேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்காக நடந்துவரும் போராட்டத்தை தொடக்கம் முதலே ஆதரித்து வந்த சேவாக் இதுகுறித்து ட்விட்டர் மூலம் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது பதிவில், தமிழக மக்கள் அமைதிகாக்க வேண்டும். அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்கக்கூடிய போராட்டத்தினை தமிழக மக்கள் முன்னெடுத்தனர். உள்நோக்கம் கொண்டவர்கள் இதனை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால், உங்கள் கோரிக்கையை மட்டும் முன்னிறுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close