Published : 23,Nov 2020 09:06 PM
மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்

மதுரையில் 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை தீடீர் நகர் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் பிச்சை (60). இவர் அதே பகுதியில் கட்டிட கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு அருகே வசித்து வரும் 12 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத சமயம் தனியாக அழைத்துச்சென்று சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டள்ளார்.
இந்நிலையில் முதியவரிடம் இருந்து தப்பிச்சென்ற சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி மற்றும் அவரது பெற்றோர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் முதியவர் பிச்சை கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பக்கத்து வீட்டு முதியவர் தவறாக நடக்க முயன்று கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.