[X] Close

தமிழகத்தில் நாளை முதல் கனமழை - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு

Heavy-rain-in-Tamil-Nadu-from-tomorrow-

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வரும் 25ஆம் தேதி தெற்கு தமிழகம் நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

24 மற்றும் 25ஆம் தேதிகளில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, காரைக்கால் மாவட்டங்களிலும், 25ஆம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களிலும் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வரும் 25ஆம் தேதி வரை வங்க கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 


Advertisement

Advertisement
[X] Close