Published : 11,Jul 2017 04:49 PM

காமன்வெல்த் போட்டிக்குத் தகுதிபெற்ற கரூர் மாணவி

Karur-girl-qualifies-for-commmonwealth

 

கரூர் மாவட்டம் தோகைமலையைச் சேர்ந்த கல்லூரி மாணவி புனிதா, தேசியப் போட்டிகளில் பதக்கம் வென்றதன் மூலம் இளையோர் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். 
14 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான காமன்வெல்த் போட்டி, பஹாமஸில் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து பங்கேற்கும் 13 வீரர், வீராங்கனைகளில் புனிதாவும் ஒருவர். தற்போது நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் புனிதா, நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொள்கிறார். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்ப்பதே தமக்கு இலக்கு என புனிதா தெரிவித்துள்ளார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்