[X] Close

தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத முகமது சிராஜ்... தேற்றும் கோலி, டீம், ரசிகர்கள்!

விளையாட்டு

Cricketer-Mohammed-Siraj-to-miss-father-s-funeral-due-to-quarantine-rules

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். தற்போது, ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிராஜ், தந்தையின் மரண செய்தி கேட்டு உடைந்து போயிருக்கிறார்.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சிராஜ். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார். இதற்காக இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா பயணமாகி இருக்கிறார்.

ஆஸ்திரேலியா சென்ற பின்புதான் அந்தத் துயர சம்பவம் அவருக்கு நிகழ்ந்துள்ளது. முகமது சிராஜின் தந்தை முகமது கவுஸ் நுரையீரல் நோய் காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) மரணமடைந்தார். முகமது சிராஜின் தந்தை வயது 53.
சிட்னியின் பிளாக்டவுன் ஓவலில் பயிற்சி அமர்வை முடித்திருந்த சிராஜுக்கு தந்தையின் இறப்பு செய்தி பேரிடியாக வந்தது. சோகத்தில் மூழ்கிய அவரை கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும்தான் தேற்றியுள்ளனர்.


Advertisement

image
முகமது கவுஸின் இறுதி சடங்குகள் இன்று நடைபெற இருக்கிறது. இன்னும் வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால், முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவில் இருப்பதால், இறுதிச் சடங்குகளுக்காக இந்தியாவுக்கு வரமுடியாது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. தற்போது 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் நடுவில் உள்ள இந்திய அணி, நவம்பர் 13ல் ஆஸ்திரேலியா வந்த பின்னர் சிட்னி நகரத்தின் புறநகரில் தனிமையில் பயிற்சி பெற்று வருகிறது. இதனால் அவரால் இந்தியா வரமுடியாத நிலை இருக்கிறது.

``இது அதிர்ச்சியளிக்கிறது. நான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆதரவை இழந்தேன். `என் மகனே, நீ என் நாட்டை பெருமைப்படுத்த வேண்டும்' என அப்பா எப்போதும் சொல்வார். என் அப்பாவின் ஆசை எப்போதுமே இதுதான். அவருக்காக இதை நான் செய்வேன். எனது ஆரம்ப நாட்களில் எனது அப்பா என்ன வகையான கஷ்டங்களை எதிர்கொண்டார் என்பதை அறிவேன். நான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆதரவை இழந்தேன்.

image


Advertisement

நான் நாட்டிற்காக விளையாடுவதைப் பார்ப்பது அவருடைய கனவாக இருந்தது, அதை உணர்ந்து அவருக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பயிற்சியாளர் சாஸ்திரி சர் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு செய்தி குறித்து தகவல் கிடைத்தது. அவர்கள் என்னை தைரியமாக இருக்கச் சொன்னார்கள், எல்லா ஆதரவையும் வழங்குகிறார்கள்" என வேதனை தெரிவித்துள்ளார் சிராஜ்.

சிராஜின் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். இவர் மகன் சிராஜை வெற்றபெற வைக்க வேண்டும் என தீவிரமாக உழைத்தார். கிரிக்கெட் பயிற்சி எடுக்க வைத்து அவரை தற்போது ஒரு கிரிக்கெட் வீரராக மாற்றியிருக்கிறார்.


இதற்கிடையே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ அணி நிர்வாகமும் சிராஜின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. ``முகமது சிராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்கள் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் முழு ஆர்.சி.பி குடும்பமும் உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள், மியான்" என்று ட்வீட் செய்துள்ளது.

இந்திய அணி மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சிராஜுக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

ரஞ்சி டிராபியில் 2016/17 சீசனில் 41 விக்கெட்டுகள் எடுத்து ஹைதராபாத் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்தார். ரஞ்சி டிராபியில் இவர் விளையாடிய விதம் ஐபிஎல் வரை கொண்டுசென்றது. 2017 ஏலத்தில் அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.2.6 கோடிக்கு எடுத்தது. இதன்பிறகு தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து வருகிறார்.


Advertisement

Advertisement
[X] Close