Published : 21,Nov 2020 09:14 AM

பாஜகவில் இணைகிறார் கே.பி.ராமலிங்கம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்த பாஜக!

Ramalingam-meetsTamilNaduBJPleaderCT-Ravi

தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியை, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி ராமலிங்கம் சந்தித்துள்ளார். இந்நிலையில் இன்று அவர் பாஜகவில் இணையவுள்ளதாக பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

image

அழகிரி ஆதரவாளரான கே.பி ராமலிங்கம் திமுகவில் விவசாய அணிச் செயலாளராக இருந்தவர். அதிமுகவில் இரண்டுமுறை எம்.எல்.ஏவாகவும் இருந்தவர், திமுகவில் இணைந்து ஒருமுறை மாநிலங்களவை எம்.பியாகவும் பதவி வகித்தவர்.

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திய போது, அவரது நிலைப்பாட்டுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை வெளியிட, உடனடியாக பதவியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். அதன்பிறகு, கே.பி ராமலிங்கம் மு.க ஸ்டாலினை தொடர்ச்சியாக விமர்சித்தே வந்தார்.

இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கட்சி நிர்வாகிகளுடனும் சட்டமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்த வரும் நிலையில், ராமலிங்கம் தற்போது பாஜகவில் இணையவுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்