Published : 11,Jul 2017 02:02 PM

சென்னை சில்க்ஸ் நகைப் பெட்டகம் மீட்பு

Chennai-silks-building-s-things-recovered

 

சென்னை தியாகராய நகரில் தீ விபத்திற்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டட தரைத்தளத்தில் இருந்து மற்றொரு நகைப் பெட்டகம் மீட்கப்பட்டுள்ளது. தீவிபத்தினால் முற்றிலும் உருக்குலைந்து போன கட்டடத்தின் தரைத்தளத்தை இடிக்கும் பணியின் போது இது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மே 30 ஆம் தேதி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் கட்டடம் முழுவதும் எரிந்து நாசமானது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அந்தக் கட்டடத்தை எந்தவித அசம்பாவிதமும் இல்லாத வண்ணம் இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜா கட்டர் என்ற நவீன இயந்திரம் கொண்டு கட்டடம் முழுவதுமாக இடிக்கப்பட்டது. தற்போது இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்