Published : 11,Jul 2017 12:55 PM

பயிற்சியாளர் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை: பிசிசிஐ

No-decision-has-been-made-on-appointment-of-new-coach--BCCI

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்று பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. 

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், இந்த தகவலுக்கு பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய பயிற்சியாளர் குறித்து 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக கிரிக்கெட் ஆலோசனைக் குழு இன்று முடிவெடுக்கும் என்று தாம் நம்புவதாகவும் அமிதாப் சவுத்ரி கூறினார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் 5 பேரிடம் சச்சின், கங்குலி மற்றும் விவிஎஸ். லட்சுமணன் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு ஜூலை 10ல் நேர்காணல் நடத்தியது. நேர்காணலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, பயிற்சியாளர் தேர்வு குறித்து கேப்டன் கங்குலியிடம் ஆலோசித்த பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்