Published : 14,Nov 2020 07:22 PM

”வெயிட்டிங்க்கு வொர்த் ப்ரோ” - எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் மாஸ்டர் டீஸர்

Master-teaser-that-raises-expectations

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “மாஸ்டர்”. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

image

மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஷாந்தனு,“கைதி”பட புகழ் அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாகவே முடிந்த நிலையில் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் படத்தின் இசைவெளியீடும் நடந்தது.

அனிருத் இசையமைப்பில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், “வாத்தி கம்மிங்” பட்டித் தொட்டியெல்லாம் பரவி பட்டையை கிளப்பியது.

image

ஆனால் எதிர்பாரத விதமாக கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் காரணமாக பட வெளியீடு தள்ளிப்போனது. இதனிடையே சூர்யாவின் “சூரரைப் போற்று” ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், மாஸ்டர் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படமானது நிச்சயம் திரையரங்கில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து பேட்டியளித்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் படம் நிச்சயமாக திரையரங்கில் மட்டுமே வெளியாகும் எனக் கூறினார்.

இந்தத் தகவல் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில், அடுத்தக்கட்ட நகர்வாக டீஸர் அப்டேட் வேண்டும் என்பதை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். இதனைத்தொடர்ந்து படக்குழு தீபாவளிபண்டிகையான இன்று மாலை 6 மணிக்கு டீஸர் வெளியாகும் எனக் கூறியது. அதன்படி தற்போது மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

 

முதலாவதாக படத்தின் டீஸர் ஒரு கிளாசிக் என்பதை இங்கு சொல்லியே ஆக வேண்டும். டீஸரில் விஜய், விஜய்சேதுபதி என மாஸ் ஹீரோக்கள் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் பிரம்மாண்டமாக படத்தின் ஒளிப்பதிவும், இசையும் அமைந்திருக்கிறது. அதற்கு நாம் அனிருத்தையும், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனையும் தனியாக அழைத்து பாராட்டலாம்.

டீஸரில் இரண்டு செய்திகள் உறுதியாகி விட்டன. ஒன்று விஜய் கல்லூரி பேராசிரியராக வருகிறார். மற்றொன்று அவர் பெயர் ஜே.டி. டீஸரில் விஜயின் ஸ்கிரின் பிரசன்ஸ் அவரை “ சோ க்யூட்” என்று சொல்லவைக்கிறது.

 

imageவிஜய்க்கே உரித்தான மேனரிசங்கள் நம்மை “அட” என புருவம் விரிய வைக்கிறது. மாளவிகா மோகனன் ஒரு சில ப்ரேமில் மட்டும் வந்து ரசிக்க இயலாமல் செய்து விட்டார்.

image

 

இன்னொரு விஷயம் படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சிகள், படத்தின் மிகப் பெரிய ட்ரீட்டாக இருக்கும் என நம்பலாம்.

image

அடுத்தது விஜய் சேதுபதி... விஜய் ஒரு பக்கம் ஸ்டைலாக மாஸ் காட்டிக்கொண்ருக்க, இன்னொரு பக்கம் விஜய் சேதுபதி அவர் ஸ்டைலில் வசனங்களை சிதறவிடுகிறார். நிச்சயம் படத்தில் விஜய் சேதுபதி வேறொரு டைமன்ஸனில் இருப்பார் என எதிர்பார்க்கலாம்.

image

டீஸரின் இறுதியில் அவர்கள் இருவரும் பார்க்கும் காட்சி இருக்கிறதே..... அதை நாங்கள் விவரிக்க இயலாது. நீங்கள் டீஸரைப் பார்த்து ரசித்துக்கொள்ளுங்கள்.

இறுதியாக லோகேஷ் கனகராஜ்... அவரின் முந்தைய படங்களின் வெளிப்பட்ட அந்த டார்க் மோடு இதிலும் வெளிப்படுகிறது. முழுமையான திட்டமிடலோடு டீஸரை ரெடி செய்திருக்கிறார். கல்லூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் நிச்சயமாக கூஸ் பம்ஸை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம். வெயிட்டிங்க்கு வொர்த் ப்ரோ....வாத்தி கம்மிங் ஒத்து.... 

 

 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்