Published : 11,Jul 2017 06:35 AM

சமூக வலைதளங்களில் நாயை தேடும் தம்பதி

couple-Searches-For-Missing-Dog-through-social-media

சென்னைக்கு சுற்றுலா வந்த ஜெர்மனி தம்பதியர் தங்கள் நாயை காணவில்லை என்று துயரத்துடன் தேடி வருகிறார்கள். இதற்காக வாட்ஸ் அப், பேஸ்புக்கில் நாயின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் இந்த வெளிநாட்டு தம்பதியர்.

செல்ல நாய் லூக் என்றால், ஸ்டெஃபன் - காக்ரா தம்பதிக்கு அலாதி பிரியம். எங்கு சென்றாலும் நாயை விட்டு பிரியாமல் இருக்கும் இந்த தம்பதியர் இந்தியாவிற்கு அண்மையில் சுற்றுப்பயணம் வந்தனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றுவிட்டு இவர்கள் சில தினங்களுக்கு முன் சென்னை வந்தனர். கடந்த சனிக்கிழமை மெரினா கடற்கரைக்கு‌ வந்த இவர்கள், தங்கள் செல்ல நாயை காருக்கு வெளியே கட்டிப்போட்டுவிட்டு காருக்குள் அமர்ந்திருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த சிலர் நாய் லுக்கை கடத்திச்சென்றுவிட்டதாக ஜெர்மனி தம்பதியர் புகார் தெரிவிக்கின்றனர்.

நாய் திருடப்பட்ட சம்பவம் பற்றி மெரினா ‌காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தங்கள் பங்குக்கு வாட்ஸ் அப், பேஸ்புக்கில் தங்கள் நாயை பற்றிய விவரங்களை இந்த வெளிநாட்டு தம்பதிகள் பகிர்ந்து வருகிறார்கள். லாப்ரடார் மிக்ஸ் வகையைச் சேர்ந்த தங்கள் நாயை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் அளிப்பதாகவும் இவர்கள் கூறியுள்ளனர். சுற்றுலா வந்த இடத்தில்‌ தங்கள் செல்ல நாயை பறிகொடுத்து விட்டது வேதனை அளிப்பதாகவும் இவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்