Published : 12,Nov 2020 02:07 PM

 சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

The-Chennai-Meteorological-Department-has-forecast-heavy-rains-with-thunder-and-lightning-in-four-districts-in-Tamil-Nadu--including-Chennai-

தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை முதல் வடதமிழக கடற்கரை வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு தினங்களுக்கு கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு இடைவெளிவிட்டு மிதமான மழை அவ்வப்போது பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்