Published : 12,Nov 2020 08:59 AM

நடுங்கிப்போன ஓட்டுநர்... பசியால் பழங்களை மட்டுமே கண்வைத்த யானை - வைரல் வீடியோ

A-wild-elephant-hijacking-a-bus-stretches-its-trunk-and-plucks-bananas-

பேருந்தை வழிமறிக்கும் காட்டு யானை ஒன்று, தும்பிக்கையை நீட்டி வாழைப் பழங்களைப் பறிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

வனப்பகுதியை ஊடறுத்து போடப்பட்டுள்ள நெடுஞ்சாயில் செல்லும் பேருந்தை, யானை ஒன்று வழிமறித்து நிறுத்துகிறது. ஓட்டுநரைக் கடந்து தும்பிக்கையை நீட்டிய அந்த யானை, உள்ளே இருந்த வாழைப்பழங்களை எடுக்க முற்பட்டது. தன் மீது தும்பிக்கையை போட்டதால், நடுங்கிப் போனார் ஓட்டுநர்.

இதனிடையே, வாழைப்பழங்களை எடுத்த யானை, சாவகாசமாக உண்ணத் தொடங்கியது. அந்த வாய்ப்பில் பேருந்தை அதிரடியாக இயக்கி வேகம் பிடித்து தப்பித்தார் ஓட்டுநர். மாமூல் வசூலிப்பது போல  யானை வழிமறித்து வாழைப்பழங்களை அபகரித்த சம்பவம், எந்த இடத்தில் நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. பழைய வீடியோவாக இருந்தாலும் இப்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்