விராட் கோலியின் உணர்வை நாம் மதிக்க வேண்டும் என ஆஸி கிரிக்கெட் வாரியம் கருத்து தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல் 2020 தொடர் இறுதி போட்டி நவம்பர் 10-ம் தேதி நடைபெறுகிறது. ஐ.பி.எல் 2020 தொடருக்கு பின் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய வீரர்கள் 3 ஒரு நாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின் முதல் ஒரு நாள் போட்டி நவம்பர் 27-ம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்குகிறது. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்கு விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருப்பார்.
டெஸ்ட் தொடரில் முதல் போட்டியுடன் கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்ப உள்ளார். ரோஹித் சர்மா மற்ற 3 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனால் அனுஷ்காவின் பிரசவத்தின் போது அவருடன் நாட்களை செலவிட விரும்புவதால் தந்தைவழி விடுமுறைக்கு விராட் கோலி பிசிசிஐ-யிடம் அனுமதி கோரியுள்ளார். இதனை பிசிசிஐ ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் கோலியில் பிரசவகால விடுப்பு குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைமை நிர்வாகி நிக் ஹோக்லே கூறுகையில், “விராட் கோலி தனது முதல் குழந்தை பிறக்கையில் அவர் அங்கு இருக்க வேண்டும் என நினைக்கும் உணர்வை நாம் மதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியா ஆஸ்திரேலியா விளையாட்டின் போது மைதானங்களில் ரசிகர்களை கூட்டுவதற்கான செயல்பாடுகளையும் ஆராய்ந்து வருகிறோம். பாதுகாப்பையும் பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix