அபுதாபியில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்தது.
தவானும் - ஸ்டாய்னிஸும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்ட பவர் பிளே ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்களை குவித்தது டெல்லி.
தவான் மற்றும் ஸ்டாய்னிஸ் இணையர் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை பொளந்து கட்டினர். இருவரும் 86 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பரிசோதனை முயற்சியாக ஓப்பனிங்கில் இறங்கிய ஸ்டாய்னிஸ் 27 பந்துகளில் 38 ரன்களை குவித்து ரஷீதின் அற்புதாமான சுழலில் க்ளீன் போல்டானார். தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயஸ் களம் இறங்கினார். 10 ஓவர் முடிவில் 102 ரன்களை எடுத்தது டெல்லி.
ஷ்ரேயஸ் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க ஹெட்மயர் கிரீஸுக்கு வந்தார். தன் பங்கிற்கு 22 பந்துகளில் 42 ரன்களை அதிரடியாக குவித்தார் அவர்.
மறுமுனையில் டெல்லிக்காக ஆங்கரிங் இன்னிங்ஸ் விளையாடிய தவான் 50 பந்துகளில் 78 ரன்களை எடுத்தார். அதில் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடங்கும். மூன்றாவது முறையாக இந்த சீசனில் சதம் விளாசுவார் தவான் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சந்தீப் ஷர்மாவின் பந்துவீச்சில் LBW முறையில் விக்கெட்டை இழந்தார். அது அவுட் இல்லை என ரிப்ளேவில் தெரிந்தது குறிப்பிடத்தக்கது.
இருபது ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை குவித்தது டெல்லி. 200 ரன்களுக்கு மேல் டெல்லி அணி எப்படியும் எடுத்துவிடு என எதிர்பார்த்திருந்த நிலையில், அதை கடைசி பத்து ஓவரில் மொத்தமாக சேர்ந்து கட்டுப்படுத்தினர் ஹைதராபாத் பவுலர்கள். சந்தீப் சர்மாவும், நடராஜனும் சிறப்பாக கடைசி இரண்டு ஓவர்களை வீசினர்.
ஹைதராபாத் அணி 190 ரன்களை விரட்டி வருகிறது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?