ஆஸ்திரேலிய டூரில் இணைகிறாரா ரோஹித் சர்மா..?

ஆஸ்திரேலிய டூரில் இணைகிறாரா ரோஹித் சர்மா..?
ஆஸ்திரேலிய டூரில் இணைகிறாரா ரோஹித் சர்மா..?

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.

அதில் கலந்து கொண்டு விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் ‘ஹிட்மேன்’ ரோகித் ஷர்மாவின் பெயரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என எந்தவொரு பார்மேட்டிலும் சேர்க்காமல் இருந்தது பிசிசிஐ.

ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் இது தொடர்பாக கேள்வி கேட்ட நிலையில் ஆஸ்திரேலியா பயணிக்கும் இந்திய அணியில் ரோகித் ஷர்மாவும் பயணிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

காயத்தினால் நடப்பு ஐபிஎல் சீசனின் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த ரோகித் மும்பை அணிக்காக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளார். 

அதையடுத்து ரோகித் ஃபிட்டாக தானே உள்ளார் என கேள்வி எழுந்த நிலையில் “கூடிய விரைவில் இது குறித்து முடிவு எடுக்கப்படும். அணியின் பிசியோ மருத்துவர் மற்றும் பயிற்சியாளர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்தால் தான் அவரது ஃபிட்னெஸ் குறித்த புரிதலில் ஒரு தெளிவு கிடைக்கும்” என பிசிசிஐயின் வட்டாரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com