[X] Close

'ஜோ'.. வைரலாகும் ஆர்ச்சரின் 6 வருட பழைய ட்வீட்..!

விளையாட்டு

Jofra-Archer-sixyearold-tweet-goes-viral-after-Joe-Biden-wins

கிரிக்கெட் வீரர் ஆர்ச்சர் 'ஜோ' என்று பதிவிட்ட பழைய ட்வீட் இன்று வைரலாகி வருகிறது


Advertisement

ஊரில் எதாவது பரபரப்பாக நடந்தால் உடனடியாக ஆர்ச்சரின் பழைய ட்வீட்கள் வைரலாகிவிடுகின்றன. இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான ஆர்ச்சர் எழுதிய ஒரு வார்த்தை ட்வீட்கள் நிகழ்கால சம்பவங்களோடு தொடர்புபடுத்தப்பட்டு வைரலாகிவிடுவதுதான் வழக்கம்.

image


Advertisement

இதெல்லாம் எப்படி? எதார்த்தமா? இல்லை கணிப்பா? என்றெல்லாம் இணையவாசிகள் ஆராய்வது இல்லை. ஆர்ச்சரின் ட்வீட்டை கையிலெடுத்து மீம்களை அள்ளி வீசுவிடுவார்கள். சமீபத்தில் ஐபிஎல் தொடர்பாகவும் ஆர்ச்சரின் ட்வீட்கள் வைரலாகின.

இந்நிலையில் தற்போது உலகமே அமெரிக்கத் தேர்தல் குறித்தும் புதிய அதிபர் ஜோ பைடன் குறித்தும் பேசிக்கொண்டு இருக்கிறது. இந்தவேளையில் ஆர்ச்சரின் பழைய ட்வீட்டும் வைரலாகி வருகிறது. 2014ம் ஆண்டு 'joe' என ட்வீட் செய்துள்ளார் ஆர்ச்சர். இன்றைய அதிபரை அன்றே ஆர்ச்சர் கணித்துள்ளார் என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close