[X] Close

இறுதிப் போட்டிக்குள் நுழைவது யார்? டெல்லி – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் திருவிழா

DC-vs-SRH-Match-Prediction-Who-will-win-today-match-Dream-IPL-2020-Qualifier-2

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது இறுதிப் போட்டியாளரை தீர்மானிக்கவுள்ள QUALIFIER TWO போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ‌‌‌‌ மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

அபுதாபியில் ‌நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி, நடப்பு சீசனில் விளையாடிய 15 போட்டிகளில் 8 வெற்றிகளையும், ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி விளையாடிய 15 போட்டிகளில் 7 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன.

இவ்விரு அணிகளும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ஹைதராபாத் அணி 11 போட்டிகளிலும், டெல்லி அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌.‌


Advertisement

ஐபிஎல் தொடரில் 2ஆவது தகுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ள டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் நடப்பு சீசன் செயல்பாடுகள் குறித்த ஒரு அலசல்

image

அமீரக அனலுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் ஆரம்பத்தில் சுமாராக ஆடிய டேவிட் வார்னரின் ஹைதராபாத் அணி இரண்டாவது பாதியில் புலிப்பாய்ச்சல் காட்டி பிளே ஆப்பில் கால் வைத்துள்ளது.


Advertisement

இதற்கு நேர் மாறாக தொடரின் ஆரம்பத்தில் முதல் 9 ஆட்டங்களில் வென்று கோப்பை இம்முறை இவர்களுக்குத்தானோ என நினைக்க வைத்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அடுத்து வந்த போட்டிகளில் சோபிக்கத் தவறி தடுமாற்றத்துடன் பிளே ஆப்பில் நுழைந்தது. முதல் தகுதிச் சுற்றில் மும்பையிடம் மோசமாக தோற்றது. டெல்லி அணி ஆடிய கடைசி 6 போட்டிகளில் 5 போட்டியில் தோற்றுள்ளது.

மறு முனையில் பிளே ஆப்பில் பெங்களூருவை எளிதில் வீழ்த்தி தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை பெற்று கோப்பையை நோக்கிய உத்வேகத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது ஹைதராபாத். டெல்லி அணியில் ஷிகர் தவான் சில சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தினாலும் தொடர்ச்சியாக ஆட்டத்திறனை வெளிப்படுத்த தவறுகிறார். இளம் புயல் ப்ரித்வி ஷா இம்முறை ஜொலிக்க தவறி விட்டார். 13 போட்டிகளில் 228 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அனுபவ வீரர் அஜிங்க்ய ரகானேவும் ஏமாற்றத்தையே தந்துள்ளார்.

டெல்லியின் பேட்டிங்கை ஒப்பிடுகையில் பவுலிங்க் மிரட்டலாகவே உள்ளது. ரபாடா, அஸ்வின், நார்ட்ஜே ஆகிய 3 வீரர்களும் எதிரணியை திணறடித்து வருகின்றனர். ஆல்ரவுண்டர்கள் அக்ஸர் படேல் மற்றும் ஸ்டாய்னிஸ் பேட்டிங்கிற்கு பக்கபலம்.

image

ஹைதராபாத் அணியை பொருத்தவரை ஆட்டத்திற்கு ஆட்டம் அதன் திறன் மெருகேறிக்கொண்டே செல்கிறது. வார்னர், விருத்திமான் சாகா, பேர்ஸ்டோ, வில்லியம்சன், மணீஷ் பாண்டே என எல்லாருமே தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். பந்துவீச்சில் ரஷீத் கான் படு சிக்கனமாக பந்துவீசி எதிரணி வீரர்களை திக்குமுக்காட வைக்கிறார்.

சேலம் எக்ஸ்பிரஸ் நடராஜன் யார்க்கர்களால் ஸ்டம்ப்புகளை தகர்த்து வருவது ஹைதராபாத்துக்கு யானை பலம். ஆரஞ்சு ஆர்மி என்ற பெயரில் வலம் வரும் ஹைதராபாத் அணி கோப்பையை முழு வீச்சில் நெருங்கி வருவது நிதர்சனம். இத்தொடரில் இதற்கு முன் இவ்விரு அணிகளும் மோதிய 2 போட்டிகளிலும் ஹைதராபாத் வென்றிருப்பது அதற்கு தன்னம்பிக்கையை தரும்.

இரு அணிகளின் ஆட்டத்திறனை ஒப்பிடுகையில் மும்பையுடன் இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பு ஹைதராபாத்துக்கே அதிகம் என தெரிகிறது. எனினும் ஹைதராபாத்தை அவ்வளவு எளிதாக இறுதிப்போட்டிக்குள் நுழைய வைத்து விடுமா டெல்லி என்ற கேள்வியும் எழுகிறது.


Advertisement

Advertisement
[X] Close