Published : 07,Nov 2020 05:34 PM
"ஆட்டத்தை ஆரம்பிக்கலாங்களா" தெறிக்கவிட்ட கமலின் "விக்ரம்" டீசர் !

டிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படத்தின் பெயர் "விக்ரம்" என சூட்டப்பட்ட டீஸரும் வெளியாகி இருக்கிறது.
மாநகரம், கைதி, மாஸ்டர் படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுடன் இணைந்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். கமல்ஹாசனின் 232 வது படமான, இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், கிராமத்து பின்னணி கதைக்கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் மற்ற நடிகர்களின் விவரங்களும் கமலின் 66 வது பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என்று தவகவல்கள் வெளியாகியிருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
Dear Guru..This is our humble gift to you sir.. Wishing you a very happy birthday. Please do keep inspiring us always sir @ikamalhaasan ?https://t.co/z8mEbtgldU
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 7, 2020
#ஆரம்பிக்கலாங்களா#என்வீரமேவாகையேசூடும்#vikram#HBDKamalHaasan
இந்நிலையில் இந்தப் படத்தின் பெயர் "விக்ரம்" என அறிவிக்கப்பட்டு டீசரும் வெளியாகி இருக்கிறது. இந்த அசத்தலான டீசருக்கு அனிருத்தின் பின்னணி இசை மேலும் வலுக்கூட்டியிருக்கிறது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் 1986 ஆம் ஆண்டு இளையராஜாவின் இசையில் "விக்ரம்" என்ற திரைப்படம் வெளியாகி வெற்றிப்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.