Published : 10,Jul 2017 04:28 PM
அக்டோபரில் 3 நாட்கள் நடைபெறும் சமந்தா - நாக சைதன்யா திருமணம்

அக்டோபரில் சமந்தா, நாக சைதன்யா திருமணம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
அக்டோபர் 6, 7, 8 ஆகிய தேதிகளில் கோவாவில் நடக்கும் இந்த திருமணத்தில், தெலுங்கு பாரம்பரியப்படி முதல் நாளும், இரண்டாம் நாள் கிறிஸ்தவ முறைப்படியும் நடக்கிறது. மூன்றாம் நாள் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. தொடர்ந்து, சமந்தா, நாக சைதன்யா தம்பதி தேனிலவுக்காக நியூயார்க் செல்ல திட்டமிட்டுள்ளனர். ‘ஏ மாயா சேசாவே’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும்போது இருவருக்குமிடையில் நட்பு உருவானது. நட்பு காதலாகி, இப்போது கல்யாணம் நடக்கவுள்ளது.