[X] Close

குடும்ப தகராறில் தச்சுத் தொழிலாளி கொன்று புதைப்பு

Murder-at-Trichy

 

திருச்சி அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த தச்சுத் தொழிலாளி குளத்தில் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் மணலில் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. 

திருச்சி துவாக்குடியை அடுத்த வாழவந்தான் கோட்டை பகுதியை சேர்ந்த கொளஞ்சியப்பன் கடந்த 8 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பி ஆயர்பாடி குளத்திற்கு குளிக்கச்சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அளித்த புகாரில் துவாக்குடி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் கொளஞ்சியப்பனின் இருசக்கர வாகனம், வாழவந்தான் கோட்டை நத்திக்குளத்தில் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்நிலையில் வாகனம் கிடைத்த இடத்தின் அருகில் கொளஞ்சியப்பனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நண்பர் ஆறுமுகம் என்பவரால், கொளஞ்சியப்பனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவர் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்துவருகிறது. கொல்லப்பட்ட கொளஞ்சியப்பனின் மனைவியிடம் விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள நண்பர் ஆறுமுகத்தை தேடி வருகிறார்கள்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close