[X] Close

‘வாய்ப்பு கொடுத்தால் வங்கத்தை தங்கமாக மாற்றுவோம்’ – மேற்கு வங்கத்தில் அமித்ஷா பேச்சு  

இந்தியா

Amit-Shah-seeks-a-chance-for-BJP-in-Bengal-promises-Sonar-Bangla-in-5-years

மேற்கு வங்கம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,


Advertisement

''மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 இடங்களில் பாஜக 200 இடங்களை கைபற்றி ஆட்சியமைக்கும். இது நாங்கள் புன்னகை செய்யும் நேரம். ஏனெனில் மம்தா பானர்ஜியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.

image


Advertisement

மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதும், எல்லையில் ஊடுருவலை தடுத்துத் நிறுத்துவதுமே பாஜகவின் நோக்கம். மோடியின் ஆட்சி மேற்கு வங்கத்திலும் அமைவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற ஆதரவு தர வேண்டும். 5 ஆண்டுகளில் சோனார் பங்களா (தங்க வங்காளம்) உருவாகும்.

வாரிசு அரசியலுக்கும் வளர்ச்சி அரசியலுக்கும் நடக்கும் போர் இந்த தேர்தல். திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். கடந்த ஓராண்டில் பாஜக தொண்டர்கள் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மம்தா பானர்ஜியின் ஆட்சியின்  மீது மேற்குவங்க மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்’’  எனக் கூறினார்.

 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close