Published : 06,Nov 2020 05:25 PM
'நெருடலாகவே இருக்கிறது' - மாஸ்டர் படம் குறித்து பேசிய லோகேஷ்..!

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் படத்தின், டீஸர் மற்றும் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ மாஸ்டர்”. இந்த வருடம் மே மாதம் மாஸ்டர் படம் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதனிடையே கொரோனா தொற்றின் தொடர் பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நிச்சயம் படம் திரையரங்கில் தான் வெளியாகும் லோகேஷ் கனகராஜ் பதிலளித்தார்.
லோகேஷின் இந்த பதில் ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில், அதனைத் தொடர்ந்து அவர்கள் படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்காக ஆவலாக காத்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் கொடுத்த நேர்காணல் ஒன்றில் இது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் “ ஒரு பொருளை தயார் செய்து வைத்து விட்டு, அதை கொடுக்கமுடியாமல் இருப்பது நெருடலாகவே இருக்கிறது. ஆனால் படம் வெளியீடு தேதியை முடிவு செய்யாமல் டீஸரையோ, ட்ரெய்லரையோ வெளியிடுவது சரியாக இருக்காது. நவம்பர் 10 ஆம் தேதியிலிருந்து திரையரங்குகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நல்லவை நடக்கும் என நான் நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.