[X] Close

‘மீனவர்களையும், படகுகளையும், கட்சத்தீவையும் மீட்டுக் கொடுங்கள்’: பிரதமருக்கு எடப்பாடி கடிதம்

Edappadi-Palanisamy-writes-letter-to-Modi

 

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஜகதாப்பட்டினம் மீனவர்கள் 3 பேர் உட்பட இலங்கை சிறையில் வாடும், 53 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 144 படகுகளை இந்தியா கொண்டு வரவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாக் நீரிணையில் மீன்பிடி பிரச்னையைத் தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்னையில் தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் இலங்கை அதற்கு மாறாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். எனவே, மீனவர்கள் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வாக அமையும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close