
நடிகை பாவனா துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகை திலீப்பை கேரள போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் திலீப் குற்றசதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியதால் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடிகர் திலீப்பிடம் ஏற்கனவே 13 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய போலீசார், இன்று காலை முதல் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். விசாரணையை அடுத்து நடிகர் திலீப்பை கைது செய்வதாக போலீசார் மாலையில் அறிவித்தனர். நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 19ல் ஓடும் காரில் துன்புறுத்தப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பல்சர் சுனில், நடிகர் திலீப்பிடம் பணம் கேட்டு மிரட்டியதால் திலீப் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திலீப்பின் மனைவி காவ்யா மாதவனுக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். பாவனா துன்புறுத்தப்பட்ட விவகாரத்துக்கும், தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று நடிகர் திலீப் தொடக்கம் முதலே மறுத்து வந்தார். மலையாள திரைக்கலைஞர்கள் சங்கமான அம்மா (AMMA) நடிகர் திலீப்புக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தது.