[X] Close

அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு

Alanganallur-Jallikattu-Held-On-Feb-1

அலங்காநல்லூரில் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், காட்சிப்படுத்தப்படக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடை நீங்கியதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், நிரந்தர சட்டம் ஏற்படுத்தப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து ஒரு பிரிவினர் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

ஜல்லிகட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடமும், விழா குழுவினர்களிடமும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போரட்டத்தை கை விடுவதாகவும் அலங்காநல்லூரில் வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விழா குழுவினரின் அறிவிப்பை ஏற்க மறுத்து மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close