தமிழின் வெற்றி இயக்குநர் வெற்றிமாறன் கதை திரைக்கதையில் சசிக்குமார் நடிக்கவிருக்கிறார். வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான பொல்லாதவன் படத்தின் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தான் இப்படத்தை தயாரிக்கவிருகிறார் என்று என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம்தான் வெற்றிமாறன் இயக்குநராகவும், ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்கள். பைக்கை சுற்றி பின்னப்பட்ட வித்தியாசமான கதை என்பதால் வெற்றி பெற்றதோடு, பாடல்களும் இப்போதுவரை பலரின் காதல் டியூன்களாக உள்ளன.
ஆடுகளம், விசாரணை, வடச்சென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய வெற்றிமாறன், அடுத்ததாக சூரியை வைத்து ஒரு படமும், நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தையும் இயக்கவிருக்கிறார். இந்நிலையில், அவரின் அடுத்தப் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.
ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 'ஆடுகளம்' படத்தை தயாரித்தார். இப்படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது. மேலும் ‘நய்யாண்டி',' ஜிகர்தண்டா' போன்ற பல படங்களைத் தயாரித்தார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணையும் இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். கதாநாயகனாக சசிகுமார் நடிக்கிறார். படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் வெளிவரும்” என்று அறிவித்துள்ளார்கள்.
இதற்கு முன்பும் சித்தார்த் நடிப்பில் வெளியான உதயம் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். அந்த படத்தை அவரது உதவி இயக்குநர் மணிமாறன் இயக்கி இருந்தார். நான் ராஜாவாக போகிறேன் படத்திற்கும் வசனம் எழுதியிருந்தார் வெற்றிமாறன்.
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?