அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னணியில் ஜோ பைடன்.!

அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னணியில் ஜோ பைடன்.!
அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னணியில் ஜோ பைடன்.!

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு பத்து கோடி பேர் தபால் முறையில் வாக்களித்துள்ளனர். மீதமுள்ள 6 கோடி வாக்காளர்கள், கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். வாக்காளர்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிபர் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப், புளோரிடாவில் தனது வாக்கை பதிவு செய்தார்.

முன்னாள் அதிபர் கிளின்டனும், அவரது மனைவி ஹிலாரி கிளின்டனும் வாக்களித்தனர்.வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மாநிலங்களில் ஒவ்வொன்றாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் பற்றி ட்ரம்ப் கூறுகையில், வெற்றி பெறுவது எளிது என்றும், தோல்வியடைவது ஒருபோதும் எளிதானது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். ஜோ பைடன் கூறுகையில், அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினரை மீட்டெடுப்போம் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நிலவும் நிறம் மற்றும் இன பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்று கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. மொத்தமுள்ள 50 மாநிலங்களிலும் சேர்த்து 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அதிபர் இருக்கையில் அமர முடியும். இந்திய நேரப்படி காலை 7 மணி நிலவரப்படி, ஜோ பைடன் 91 இடங்களிலும், ட்ரம்ப் 67 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com