Published : 10,Jul 2017 07:16 AM
ஈசிஆர் சாலை சுங்கக் கட்டணம் உயர்கிறது

ஈசிஆர் எனப்படும் கிழக்கு கடற்கரைச் சாலையில் செல்வதற்கான சுங்கக் கட்டணம் 15 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு ஜூலை 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் வரும் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை புதிய கட்டணம் அமலில் இருக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையை தினந்தோறும் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் வழங்கும் திட்டமும் கொண்டு வரப்படும் என்றும் தெரிகிறது. சென்னையை அடுத்த உத்தண்டியிலிருந்து புதுச்சேரி அருகேயுள்ள அனுமந்தை வரை கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்து. இதில் உத்தண்டியிலிருந்து மாமல்லபுரம் வரை சமீபத்தில் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.