
பெண்களுக்கு எதிரான கருத்தினை சொல்லி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்
கேரள பிரதேச காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தனது பெண்கள் விரோத கருத்துகளுக்காக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மாநில தலைநகரில் நடந்த அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் “பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவருக்கு ஏதேனும் சுயமரியாதை இருந்தால் அவள் தற்கொலை செய்துகொள்வாள் அல்லது அதுபோன்ற சூழ்நிலையில் ஒருபோதும் சிக்கமாட்டேன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வாள்” எனத் தெரிவித்தார்
சோலார் வழக்கைப் பற்றி பேசிய முல்லப்பள்ளி ராமச்சந்திரன் “மாநில அரசு பாதுகாப்புக்காக ஒரு பாலியல் தொழிலாளியை முன்வைத்து, அவரிடம் கலந்துரையாடல்களைத் திருப்புவதன் மூலம் தான் தப்பிக்க முடியும் என்று முதலமைச்சர் பினராய் விஜயன் நினைக்கக்கூடாது. கேரள மாநில உருவாக்க நாளில் பேசிய சில நிமிடங்களில், தனது கருத்துகள் ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியிருப்பதை உணர்ந்த அவர், அதே கூட்டத்தின் முன் மன்னிப்பு கேட்டார். "எனது சீற்றம் எல்.டி.எஃப் அரசாங்கத்திற்கு எதிரானது, இது பெண்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் அல்ல. எனது அவதூறான கருத்துகளுக்கு நான் நேர்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று முல்லப்பள்ளி கூறினார்.
இவர் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது முதல் முறை அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் சுகாதார அமைச்சர் சைலஜாவை 'கோவிட் ராணி' என்று குறிப்பிட்டார், மேலும் அவரை 'நிபா ராஜகுமாரி' என்று அழைத்து சர்ச்சையில் சிக்கினார் அவர்..