Published : 01,Nov 2020 01:15 PM

காத்திருந்து காத்திருந்து... காதலனை தேடி சென்னைக்கு புறப்பட்ட நீலகிரி மணப்பெண்?

Nilgiri-bride-leaves-for-Chennai-in-search-of-lover

தன்னை அழைத்துச் செல்லாத காதலனை தேடி சென்னைக்கு பஸ் ஏறி இருக்கிறார் மணப்பெண் பிரியதர்ஷனி.

நீலகிரி மாவட்டம் மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்துக்கும், தூனேரியைச் சேர்ந்த பிரியதர்ஷினிக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மணமக்கள் மணக்கோலத்தில் மேடையில் வீற்றிருந்தனர்.

படுகர் இன மரபுப்படி, மணமேடையில் மணப்பெண் 3 முறை சம்மதம் தெரிவித்த பின்பே தாலிகட்ட வேண்டும். அதன்படி சம்மதம் கேட்டபோது மௌனம் காத்த பிரியதர்ஷினி, மூன்றாவது முறை கேட்கையில் சம்மதமில்லை என்று கூறி, ஆனந்தின் கைகளை தடுத்தார்.

தான் விரும்பும் ஒருவர், ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார் என்று கூறியவாறே, எழுந்து அங்கிருந்து செல்ல முற்பட்டார். இதை மறுத்து தடுத்த பிரியதர்ஷினியின் உறவினர்கள், அவரை தாக்க முற்பட்டனர்.

இவை ஒருபுறம் நடக்க மாப்பிள்ளைக் கோலத்திலிருந்த ஆனந்தோ, செய்வதறியாமல் சங்கடத்தில் தவித்தார். இதன்பின், நாள் முழுவதும் காத்திருந்தும் பிரியதர்ஷினியை கரம்பிடிக்க, அவரின் காதலன் வரவில்லை எனக் கூறப்படுகிறது. திருமணத்தை நிறுத்தியதால் மனமுடைந்த பெற்றோர் வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில், காதலனைக் காண அவர் சென்னை புறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்