தன்னைக் கடத்தி ஓடும் காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி பொய்ப் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மும்பையில் உள்ளது சார்கோப் பகுதி. இங்குள்ள 5-வது செக்டரில் வசித்து வருபவர் சுமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 20. மாணவியான இவர், வழக்கம் போல கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த போது, காரில் வந்த 3 பேர் கடத்தி பாலியல் வன்முறை செய்ததாகவும் பின்னர் ரோட்டில் வீசிவிட்டு சென்றதாகவும் சார்கோப் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்க, 8 தனிப்படை அமைத்தனர். சுமா கடத்தப்பட்டதாகச் சொன்ன இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை சோதித்தனர். அவர் சொன்னது போல் எந்த காரும் அங்கு வரவில்லை. ஆனால் அவர் ஆட்டோவில் செல்வது கேமராவில் பதிவாகி இருந்தது. போலீசார் ஆட்டோ டிரைவர்களிடம் விசாரித்தனர். அதில் ஒரு ஆட்டோ டிரைவர், அந்தப் பெண் மட்டும் தனியாக வந்ததாகவும் யாரும் அவரைக் கடத்தவில்லை என்றும் கூறினார். இதையடுத்து அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என தெரியவந்தது. தனது ஃபிரண்டை மாட்டிவிடவே இப்படிச் செய்ததாக, அவர் கூறினார். இதையடுத்து போலீசார் எச்சரித்து அந்த மாணவியை அனுப்பி வைத்தனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி