
தன்னால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் ஆபாச படங்களை, நிச்சயித்த மாப்பிள்ளைக்கு அனுப்பிய தடகள வீரர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை அடுத்த டி.பி. சத்திரம் பகுதியில் வசித்து வருபவர் தீபக். தடகள வீரர். இவர், தனக்கு பயிற்சி அளித்த தடகள பயிற்சியாளரின் மகளை காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஆசை வார்த்தைக் கூறி, தனது காதல் வலையில் அந்தக் கல்லூரி மாணவியை சிக்க வைத்த தீபக், குளிர்பானத்தில் மயக்க மருந்துகொடுத்து பாலியல் வன்கொமை செய்துள்ளார். அப்போது, ஆபாசப் படங்களை தனது செல்போனில் எடுத்து வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், கல்லூரி மாணவிக்குப் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்வதை அறிந்த தீபக், திருமண ஏற்பாடுகளை நிறுத்தா விட்டால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவேன் என மிரட்டியுள்ளார். அந்த மாணவி அதைப் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து நிச்சயத்த மாப்பிள்ளைக்கே அந்த வீடியோவை அனுப்பி வைத்துள்ளார் தீபக். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து தீபக் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.