பெரும்பாலான நடிகர், நடிகைகளுக்கும் ரசிகர்களுக்கும் உறவுப் பாலமாக விளங்குவது சமூக வலைதளங்கள்தான். தங்கள் பட அப்டேட்களையும் தாங்கள் செல்லும் இடங்களையும் பிடித்த விஷயங்களையும் உடனுக்குடன் பகிர்ந்துகொள்வதோடு லைவ் சேட்டிங்கிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், நடிகர் நடிகைகளின் பக்கங்களை ரசிகர்கள் தொடர்ந்து ஃபாலோவ் செய்கிறார்கள்.
பாலிவுட் சூப்பர் ஸ்டாரில் அமிதாப் பச்சனிலிருந்து ரஜினி, விஜய், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பெரும்பாலான நடிகர்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்குகிறார்கள். அப்படி இயங்குபவர்களில் நடிகை ஸ்ருதி ஹாசனும் ஒருவர். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருக்கும் ஸ்ருதிஹாசனை ட்விட்டரில் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பின்தொடர்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் 14 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுடன் இருந்த ஸ்ருதிஹாசன், தற்போது 15 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை தொட்டிருக்கிறார். இதற்காக, இன்று தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கைகளில் 15 ஆம் அட்டைப்பட நம்பரை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு வீடியோ பதிவிட்டுள்ளார்.
அதில், ”எனது 15 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ்களுக்கும் நன்றி. என் வாழ்க்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்வதோடு உங்களையும் அறிந்துகொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் அரவணைப்பு” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஒரு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் அதிகம் பேர் ஃபாலோவ் செய்யும் தென்னிந்திய நடிகைகளில் ரகுல் பிரீத் சிங்கும் காஜல் அகர்வாலும் 15 மில்லியன் ஃபாலோயர்ஸ்களோடு முதலிடத்தில் இருக்கிறார்கள். தற்போது, அவர்களின் சாதனையை சமன் செய்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.
நடிகை சமந்தாவை 13 மில்லியன் பேரும், தமன்னாவை 11 மில்லியன் பேரும், கீர்த்தி சுரேஷை 6 மில்லியன் பேரும், சாய் பல்லவியை 2 மில்லியன் பேரும், ராஷ்மிகா மந்தனாவை 10 மில்லியன் பேரும், ராஷி கண்ணாவை 5 மில்லியன் பேரும், நிதி அகர்வாலை 5 மில்லியன் பேரும், மாளவிகா மோகனனை 1 மில்லியன் பேரும் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!