நடிகை ஹன்சிகாவின் 50 வது படமான ’மஹா’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதையொட்டி கேக் வெட்டிக் கொண்டாடி பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், ஹன்சிகா.
நடிகை ஹன்சிகா நடிகையாக முதன் முதலில் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் ’தேசமுதுரு’ படத்தில்தான் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அறிமுகமானார். தமிழில் தனுஷுடன் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தில் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துவரும் ஹன்சிகா ‘ஷக்கலக்க பூம் பூம்’ இந்தி சீரியலில்தான் குழந்தை நட்சத்திரமாக முதன் முதலில் நடிப்புத்துறைக்குள் வந்தார். அடுத்தடுத்து குழந்தை நட்சத்திரமாக பல இந்தி படங்களில் நடித்துள்ளார். அதற்காக, விருதுகளையும் வென்றுள்ளார். தமிழில், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2, வேலாயுதம், தீயா வேலை செய்யணும் குமாரு, பிரியாணி, மான் கராத்தே, ஆம்பள, அரண்மனை, புலி, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, போக்கிரி ராஜா, போகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ஹன்சிகாவின் 50 வது படமான ’மஹா’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததையொட்டி தனது ட்விட்டரில் ”எனது 50 வது படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நன்றி. சிம்புவிற்கும் என சிறப்பான நன்றி” என்று நெகிழ்ந்து பதிவிட்டு இப்படத்தின் இயக்குநர் ஜமீல், நடிகர் சிம்பு உள்ளிட்டவர்களை டேக் செய்திருக்கிறார். ஹன்சிகாவும் சிம்புவும் ஏற்கனவே, ’வாலு’ படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தல் - திரெளபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பின்னணி என்ன?
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?