பஞ்சாப் Vs ராஜஸ்தான்: வெளியேறப்போவது யார்?

பஞ்சாப் Vs ராஜஸ்தான்: வெளியேறப்போவது யார்?
பஞ்சாப் Vs ராஜஸ்தான்: வெளியேறப்போவது யார்?

ஐபிஎல் போட்டியின் 50-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  இன்று மோதுகின்றன.

முதல் 7 ஆட்டங்களில் ஆறில் தோற்று பின்தங்கியிருந்த பஞ்சாப் அணி, கடைசி 5 ஆட்டங்களில் எதிர்பாராத ஃபார்முக்கு திரும்பி வரிசையாக வெற்றி பெற்று தற்போது 12 புள்ளிகளுடன் உள்ளது.  

இந்த ஆட்டத்திலும் பஞ்சாப் அணி தனது வெற்றி நடையை தொடரச் செய்து பிளே-ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்த முனைப்பு காட்டும். பேட்டிங்கைப் பொருத்தவரை கிறிஸ் கெயில் இணைந்தது முதல் அணிக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஆட்டங்களில் 5 வெற்றி, 7 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ளது. ராஜஸ்தானைப் பொருத்தவரை, கடைசி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான மும்பையை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்த ஆட்டத்தையும் வெல்வதற்கு முயற்சிக்கும். இன்று ராஜஸ்தான் தோல்வியைச் சந்தித்தால் பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும். 

பஞ்சாப் உத்தேச அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), மந்தீப் சிங், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், க்ளென் மேக்ஸ்வெல், தீபக் ஹூடா / மாயங்க் அகர்வால், கிறிஸ் ஜோர்டான், எம் அஸ்வின், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி

ராஜஸ்தான் உத்தேச அணி: ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ராகுல் தெவதியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், அங்கித் ராஜ்பூத் / ஜெய்தேவ் உனட்கட், கார்த்திக் தியாகி

பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் இதுவரை ஐபிஎல் தொடரில் மொத்தமாக 20 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் பஞ்சாப் 9, ராஜஸ்தான் 11 வெற்றிகளை பதிவு செய்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com