[X] Close

மீன் கடைக்காரரை ஏமாற்றிய காகம்: வைரல் வீடியோ

உலகம்

Crow-cheating-fishmonger--Viral-video

‘ஓடுமீ னோட உறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாங் கொக்கு’  என்பது  ஒளவையார் பாடிய  மூதுரை பாடல். ஆனால், கொக்குபோல் காக்கையும் காத்திருக்கும் என்பதைக் காண்பித்திருக்கிறது ஒரு  வைரல் வீடியோ.  அதாவது, மீன்கடைக்காரர் கொடுக்கும் சின்ன சின்ன  மீன்களை வாங்கி கீழே வைத்துவிட்டு பெரிய மீன் கொடுத்ததும் மீனோடு எஸ்கேப் ஆகும் காக்கையின் பழைய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகியுள்ளது.


Advertisement

 image

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில்,  கா… கா என்று கரைந்துகொண்டிருக்கும் காக்கையிடம்  சின்ன சின்ன மீன்களை கொடுக்கிறார் கடைக்காரர். ஒவ்வொரு, சின்ன மீனையும் தனது அலகால் கவ்வி கீழே போட்டுவிட்டு காத்திருக்கிறது காகம். ஒரு கட்டத்தில் கடைக்காரர் பெரிய மீனைக் கொடுத்ததும்… வாயாலேயே எடைபோட்டு  கவ்வியபடி நைஸாக மீனோடு எஸ்கேப் ஆகும் காட்சி பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறது.  


Advertisement

 ‘புத்திசாலித்தனம் இல்லாத லட்சியம் இறகுகள் இல்லாத பறவைப் போன்றது. இந்த காகத்திற்கு லட்சியம் இருக்கிறது’ என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்

 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close