சைகையால் பேசிக் கொண்ட விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா- வைரல் வீடியோ 

சைகையால் பேசிக் கொண்ட விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா- வைரல் வீடியோ 
சைகையால் பேசிக் கொண்ட விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா- வைரல் வீடியோ 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வழிநடத்தி வருகிறார். 

பெரும்பாலும் அவர் விளையாடும் ஆட்டங்களை நேரில் வந்து பார்த்து, உற்சாகம் கொடுப்பது அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவின் வழக்கம். அது நடப்பு ஐபிஎல் சீசனிலும் தொடர்கிறது. 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதின. 

அப்போது களத்தில் சக வீரர்களோடு ஆட்டத்தில் அப்ளை செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பேசியபோது ஸ்டேண்டில் நின்று கொண்டிருந்த தன் மனைவி அனுஷ்காவை பார்த்து ‘சாப்பிட்டாயா?’ என்று சைகை மூலம் கேட்டார். அதற்கு அனுஷ்காவும் சாப்பிட்டேன் என்பதற்கு ‘தம்ப்ஸ் அப்’ சைகையை காட்டியிருந்தார். 

அந்த காட்சி தற்போது ஷார்ட் கிளிப் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com