[X] Close

கார் பந்தயத்தில் முதல் பெண்: சிலிர்க்க வைக்கும் 16 வயது சிறுமி

Racing-cars-in-the-race--16-year-old-girl

கோவையில் நடைபெறும் தேசிய அளவிலான கார் பந்தயத்தில், பார்முலா ரேசிங் தர கார்களை இயக்கும் முதல் இந்திய‌ பெண் வீராங்கனையான மிரா எர்டா பங்கேற்றுள்ளார். ஆண் போட்டியாளர்களுக்கு இணையாக திறமையை வெளிப்படுத்தி வருவதாக, அந்த 16 வயது சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சீறி பாயும் கார்கள். நொடிக்கு நொடி அதிகரிக்கும் வேகம்.பார்வையாளர்களின் இதய துடிப்பை அதிகரிக்கும் விறுவிறுப்பு என பலராலும் வியந்து பார்க்கப்படும் பார்முலா கார் பந்தயத்தில் தடம் பதித்து வருகிறார் 16 வயது மிரா எர்டா. குஜராத் மாநிலம் வதோராவைச் சேர்ந்த இவர், இந்திய அளவில் பார்முலா கார் பந்தயத்தில் பங்கேற்கும் முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான ஜேகே டயர்சின் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள இவர் சக ஆண் போட்டியாளர்களுக்கு இணையாக களத்தில் சீறிப் பாய்கிறார்.
இதுகுறித்து சிறுமி கிரிட் எர்டா கூறுகையில் , ஆண்களுக்கு மத்தியில் ஒரே ஒரு பெண்ணாக பந்தய கார் போட்டியில் களம் இறங்குவது என் ஆர்வத்தை அதிகரிக்கிறது. சின்ன சின்ன இடையூறுகள் ஏற்பட்டாலும், ஆண்களுக்கு நிகராக போட்டியிடுவது மகிழ்ச்சி. வேகமான கார்களை ஆண்கள் மட்டுமே இயக்கமுடியும் என்ற மனநிலை இருக்கும் நிலையில், அவர்களுடன் போட்டியிடுவது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது’ எனக் கூறுகிறார்.
இதுகுறித்து சிறுமி கிரிட் எர்டாவின் தந்தை, மிரா எர்டா கூறுகையில், ‘இவர் பி.எம்.டபிள்.யூ பந்தய காரை இயக்குகிறார். இது இந்தியாவில் அதிவேகமான பந்தய கார். மிரா எர்டாவை நினைத்து எங்கள் குடும்பம் பெருமைப்படுகிறது’ என்கிறார். 
கடந்தாண்டு பார்முலா 4 பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்றதோடு, பி.எம்.டபிள் யூ பந்தய காரை இயக்கும் முதல் இந்திய பெண் என்ற பெயரையும் தன்வசமாக்கியுள்ளார் மிரா எர்டா.
மலாசியா, சவூதி அரேபியாவில் நடைபெறும் பார்முலா பந்தயங்களில் சாதிப்பதே தனது லட்சியம் என கூறும் மிரா எர்டா, பெண்கள் எவருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை இந்த உலகிற்கு உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும் என  உறுதியாகக் கூறுகிறார் மிரா எர்டா. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close