சென்னை கொடுங்கையூரில் செல்போன் சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் என்ற 17 வயது சிறுவன், சென்னை கொடுங்கையூரில் உறவினர் வீட்டில் தங்கி, மூலக்கடையில் பழரச கடையொன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு ஜங்ஷன் பாக்ஸ் மூலமாக செல்போனுக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்துள்ளார். வீட்டின் அருகில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு வருவதற்கு முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனையடுத்து சடலத்தை சஞ்சயின் பெரியம்மா மகன் ரமேஷ் என்பவர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். உடற்கூறு ஆய்வு செய்யாமல் எடுத்துச் சென்ற காரணத்தினால், மீண்டும் ஸ்டேன்லி மருத்துவமனைக்கு சிறுவன் சஞ்சயின் உடல் வரவழைக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
திருமணம் செய்வதாகக்கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞர் போக்சோவில் சிறையிலடைப்பு
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!