தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடுமை... போக்சோ சட்டத்தில் கைது

தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடுமை... போக்சோ சட்டத்தில் கைது
தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடுமை... போக்சோ சட்டத்தில் கைது

காரிமங்கலம் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். 


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். லாரி ஒட்டுனராக உள்ள இவர், கடந்த 13 வருடங்களுக்கு முன்பு தனலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டைகள் வருவது வழக்கமாக இருந்துள்ளது.

இதனால் தனலட்சுமி தன் பிள்ளைகளை கணவன் வீட்டிலேயே விட்டுவிட்டு காவேரிபட்டணத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதும், பின்னர் சிறிது நாட்கள் கழித்து மீண்டும் கணவன் வீட்டிற்கு வருவதுமாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. 


இதேபோல் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவனிடம் தகராறு ஏற்பட்டதில், ஒரு மகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்ற தனலட்சுமி, நேற்று முன்தினம் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமி, தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமி, நேற்று காரிமங்கலம் காவல் நிலையத்தில் கணவர் சண்முகம், தன் இரண்டாவது மகளை பாலியல் தெந்தரவு செய்ததாக புகார் அளித்தார். பின்னர் சண்முகத்தை பிடித்து காரிமங்கலம் காவல் துறையினர் விசாரணை செய்ததில் பாலியல் தெந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து சண்முகத்தை பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சண்முகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து கடந்த வாரத்தில் காரிமங்கலம் பகுதியில் மூன்று பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com