[X] Close

விஐபி 3-யிலும் முக்கிய ரோலில் கஜோல்: தனுஷ் உறுதி

Kajol-will-play-important-role-in-VIP-3-also--Dhanush

விஐபி 3-யிலும் கஜோல் நிச்சயம் இடம்பெறுவார் என நடிகர் தனுஷ் உறுதி கூறியுள்ளார்.

தனுஷ், அமலா பால், கஜோல் உள்ளிட்டோரை வைத்து சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் படம் வேலையில்லா பட்டதாரி 2. ஹீரோ தனுஷுடன் சரிக்குசரி போட்டிபோடும் கதாபாத்திரத்தில் இதில் நடிக்கிறார் நடிகை கஜோல்.

இந்நிலையில் விஐபி 2-வின் பிரஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை கஜோல், " சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தென்னிந்திய சினிமா கடந்த சில வருடங்களில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. உதாரணத்திற்கு பாகுபலியையே வைத்துக்கொள்ளலாம். வசூலிலும், மக்கள் மனதிலும் பெரும் சாதனையை படைத்துள்ளது" என்றார்.


Advertisement

தொடர்ந்து தனுஷ் பேசும்போது கஜோலின் நடிப்பை வெகுவாக பாராட்டினார். மேலும் பேசிய தனுஷ் "விஐபி 3-யிலும் முக்கிய ரோலில் கஜோல் நடிப்பார் எனக் குறிப்பிட்டார். திரையில் கஜோல் வரும் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும்" என்றர். விஐபி 2-வை ஜூலை 28-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close