[X] Close

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தாலி செயின் பறிப்பு - பீதியில் பெண்ணாடம் மக்கள்

குற்றம்

near-pennadam-serial-robbery--stole-thali-chain-while-sleeping-women-

பெண்ணாடம் அருகே மூன்று வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை. தூங்கிக்கொண்டு இருந்த பெண்ணிடம் தாலி மற்றும் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.


Advertisement

image

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த செம்பேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பெண்ணாடத்தில் உள்ள மற்றொரு வீட்டில் இரவு தங்கி உள்ளார். முதலில் ராமசாமி வீட்டிற்கு சென்ற கொள்ளையர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோ மற்றும் அங்கிருந்த பொருட்களை ஆராய்ந்ததில் ஒன்றும் கிடைக்காததால் அருகில் உள்ள மோகன் என்பவரின் வீட்டிற்கு சென்று அவரது வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆராய்ந்து பார்த்து அங்கேயும் ஒன்று இல்லாததால் வெளியே வரும்பொழுது சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்த்தபோது 2 மர்ம நபர்கள் பொதுமக்களை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி சென்றனர் சிறிது தூரம் கொள்ளையர்களை பொதுமக்கள் துரத்தி சென்றனர்.


Advertisement

image

மீண்டும் இன்று அதிகாலை கொள்ளையர்கள் அதே பகுதியில் உள்ள மணிவாசகம் என்பது வீட்டின் பின்பக்கம் வழியாக கதவை உடைத்து உள்ளே சென்றபோது மணிவாசகரின் மனைவி தேவி குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்த போது தேவியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தாலி மற்றும் ஒரு பவுன் செயினை கொள்ளையர்கள் பறித்துச் செல்லும் பொழுது சுதாரித்துக்கொண்ட தேவி செயினை பிடித்துக் கொண்டார். அதில் சிறிதளவு செயின் மட்டும் தேவின் கையில் சிக்கிக் கொண்டது தேவி கூச்சலிட்டதும் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்,


Advertisement

Advertisement
[X] Close