Published : 09,Jul 2017 03:27 AM

அசாமில் கடும் மழை: வெள்ளக்காடானது 17 மாவட்டங்கள், 25 பேர் பலி

heavy-rain-in-assam

அசாம் மாநிலத்தில் தொடரும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அசாமில் தென்மேற்குப் பருவ மழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், மழை வெள்ளத்துக்கு 17 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. லக்கிம்பூர், கோலாகாட், கரீம்கஞ்ச், கவுகாத்தி, விஸ்வநாத், சோனித்பூர், மஜூலி, பார்பேதா, நவ்கான், நல்பாரி, சிவசாகர் ஆகிய மாவட்டங்கள் எங்கும் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. வீடுகள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. எங்கெங்கும் ஆறு போல மழை வெள்ளம் ஓடுவதால், தப்பிப்பதற்காக தெர்மோகோல் மற்றும் மரத்தாலான தற்காலிகப் படகுகளை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்