Published : 24,Oct 2020 03:30 PM
புதுச்சேரியில் மீண்டும் வெளியான ’பிகில்’: மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்

கடந்த ஆண்டு விஜய், நயன்தாரா நடிப்பில் ‘பிகில்’ படம் வெளியானது. அட்லி இயக்கிய இப்படம் பெண்கள் கால்பந்தை மையப்படுத்தி தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தது. அட்லி - விஜய் கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. அத்துடன் வில்லு படத்திற்குப் பிறகு நயன்தாரா 10 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார்.
சமீபத்தில் பாண்டிச்சேரியில் கொரோனா ஊரடங்குகள் தளர்த்தப்பட்டதாலும் புதுப்படங்கள் எதுவும் வெளியாகததாலும் பாண்டிச்சேரி சண்முகா தியேட்டரில் மீண்டும் பிகில் படம் வெளியாகியுள்ளது.இதனால், விஜய் ரசிகர்கள் குதுகலத்தில் இருக்கிறார்கள்.
அதுவும் ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள் வெற்றிகரமாக ரசிகர்கள் ஆதரவோடு ஓட்டப்படுகின்றன.